Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தலில் பாஜக முழு ஆதரவு ! அதிமுகவினர் கொண்டாட்டம்....

இடைத்தேர்தலில் பாஜக முழு ஆதரவு ! அதிமுகவினர் கொண்டாட்டம்....
, வெள்ளி, 4 அக்டோபர் 2019 (15:47 IST)
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவை கோருவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக அலுவலகத்துக்கு சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வரவுள்ள இடத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பாஜக உறுதியளித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிக்குமாறு, சமீபத்தில், சென்னைக்கு வருகை தந்த மோடியிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்தார்.
 
இந்நிலையில், தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாஜக அலுவலகத்திற்கு சென்று பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க கோரியும், பாஜக தலைவர்கள் அதிமுகவிற்காக பரப்புரை செய்ய கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, பெரும் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
 
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
webdunia
இரு கட்சிகளிடையே எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது.. இன்று. அமைச்சர் ஜெயக்குமாருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இதையடுத்து இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யும் வகையில் பாஜகவினர் தீவிரமாகச் செயல்படுவர்
இடைத்தேர்தலில் பரப்புரைக்கு செல்வது குறித்து தலைமை முடிவு செய்யும். மாநில பாஜக தலைவர் இல்லாததால் அகில் இந்திய தலைமையிடம் தான் பேச முடியும் என்று தெரிவித்தார்.
 
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு பற்றி பின்னர் தெரிவிக்கப்பட்டும் எனத்  தெரிவித்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரும் ஜெயக்குமார்.. பொன்னாருடன் சந்திப்பு