Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவன் இருக்கான், ஆனா டம்மியா இருக்கான்... சர்ச்சையை கிளப்பும் பொன்னார் பேச்சு!

Advertiesment
தலைவன் இருக்கான், ஆனா டம்மியா இருக்கான்... சர்ச்சையை கிளப்பும் பொன்னார் பேச்சு!
, திங்கள், 18 நவம்பர் 2019 (15:13 IST)
தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர, சர்வ வல்லமை பெற்றவர்களாக அவர்கள் இல்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். 
 
ரஜினிகாந்த் தான் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததிலிருந்து தமிழகத்தில் வெற்றிடம் நிலவிவருவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அவரின் கருத்தை அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி விமர்சித்து வந்தனர். 
 
மேலும் ரஜினிகாந்த் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என பலரும் விமர்சனங்களை வைத்து வந்த நிலையில் சமீபத்தில், திருவள்ளுவருக்கும் எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள், ஆனால் இருவரும் சிக்க மாட்டோம்.  தமிழகத்தில் இன்னும் வெற்றிடம் நீள்கிறது என கூறினார். 
 
ரஜினியின் இந்த கருத்தை திமுக, அதிமுகவினர் மறுத்தாலும் பாஜகவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆம், தமிழக பாஜகவின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என கூறினார். 
 
நடிகரும் மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவருமான கம்லஹாசனும் ரஜினியின் கருத்தை ஏற்றுக்கொண்ட நிலை இப்போது பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் இதை ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர, சர்வ வல்லமை பெற்றவர்களாக இல்லை.  அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான வெற்றிடம் தமிழகத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவுடன் பாஜக தற்போது கூட்டணியில் உள்ள நிலையில் பாஜவினர் இவ்வாறு பேசுவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.டி.வி தினகரன் கட்சிக்கு 'சசிகலா' தலைவர்? தொண்டர்கள் நிலை என்ன ?