Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடரும் மணற்கொள்ளை கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள் ?

Advertiesment
karur
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (19:04 IST)
அரசியல் கட்சிகள் கூட  கண்டுகொள்ளவில்லை, நேரிடையாக களத்தில் இறங்கிய கடை உரிமையாளர்கள்  தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை காட்டிய சம்பவம்.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம்,  வாங்கல் பகுதியை அடுத்த மல்லம்பாளையம் பகுதியிலிருந்து, கணபதிபாளையம் என்கின்ற ஸ்டாக் பாயிண்ட் பகுதிக்கு மணல் ராட்சத இயந்திரங்களால் அள்ளப்பட்டு லாரிகளில் தினந்தோறும் 600 க்கும் மேற்பட்ட லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, அரசு மணல் குவாரிகளை முடக்கி அதற்கு மாற்றாக கிரஷர் மண்ணை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்திய நிலையில், இந்த வாங்கல் காவிரி ஆற்றில் தொடரும் மணற்கொள்ளையால், அதிமுக கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட மெளனம் காத்த நிலையில், இந்த மணல் குவாரியாலும், மணல் லாரிகளாலும் விபத்து ஏற்படுவதாக கூறி, அதை கண்டித்து வாங்கல் கடைவீதி உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். இதில் கட்சி சார்பில்லாமல் அமைதி வழி போராட்டம் நடத்தி வரும் இந்த கடைவீதி உரிமையாளர்களது போராட்டத்திற்கு, அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளச்சந்தையில் குழந்தைகள் விற்பனை: பிபிசி புலனாய்வில் சிக்கிய குற்றவாளி