Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் அப்செட் ! தனிக்கட்சி தொடங்க திட்டமா?

Advertiesment
நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ் அப்செட் ! தனிக்கட்சி தொடங்க திட்டமா?
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (12:19 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர்   நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து  4 பேரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என  சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  முன்னாள் முதல்வர் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து  நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு  நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி நீதிபதிகள் கூறியதாவது: ''அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால, தீர்மானத்திற்குத் தடைவிதிக்க முடியாது என்றும், தடைவிதித்தால், கட்சியில் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் ''என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்து இதைக் கொண்டாடி வருகின்றனர். இது நிச்சயம் ஜெயலலிதாவின் விசுவாசியான  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிர்பார்க்காத  தீர்ப்புதான்.
 
ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக  ஓபிஎஸ் அறிவித்த நிலையில், இன்று நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

AI ல நீ ஆட்டம் காட்டுனா.. Game ல நான் காட்டுவேன்! – Xboxக்கு ஆப்பு வைக்கும் Google Play Games?