சாத்தான்குளம் வழக்கில் சாட்சியாக மாறிய காவலர் ரேவதியின் கணவர் எங்களக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக மதுரை ஐகோர்ட்டில் சாத்தான்குளம் ரேவதி கூறிய சாட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரேவதி அந்த காவல்நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஆவார்.
இந்நிலையில் காவலர் ரேவதியின் கணவர் எங்களக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, 10 மணியளவில் தொலைபேசியில் ரேவதி பேசிய போது தந்தை - மகன் இருவரையும் சக காவலர்கள் அடித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் தண்ணீர் கேட்டதாக எனது மனைவி வருத்ததுடன் கூறினார். உயிரிழப்பு தகவலறிந்து எனது மனைவில் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். சம்பவத்தின் போது பணியில் இருந்ததால் விசாரணையில் தனக்கு பிரச்சனை வரும் எனவும் கூறினார்.
இருப்பினும் அவரை தைரியமாக இருக்க சொன்னேன். ஏற்கனவே நாங்கள் உரிய பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை, ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு அவசியமாக உள்ளது என அவர் கோரியுள்ளார்.