Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மணி நேரத்தில் 18 செல்ஃபோன்! – பிடிபட்ட ரெக்கார்ட் பிரேக்கிங் திருடன்!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:23 IST)
சென்னையில் மூன்று மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய பலே திருடனை பிடிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த நபரிடம் இருந்து பைக்கில் சென்ற இருவர் செல்போனை பறித்துக் கொண்டு விரைந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே எதிரே காரை ஓட்டி வந்த நபர் பைக்கிற்கு முன்னே காரை நிறுத்த அதில் திருடர்கள் நிலை தடுமாறியுள்ளனர்.

பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் விழுந்துவிட மற்றவர் பைக்கில் எஸ்கேப் ஆகியிருக்கிறார். சிக்கிய நபரை போலீஸார் பிடித்து விசாரித்ததில் அவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்று தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே ஐந்து வருடங்களுக்கு முன்பு செல்போன் திருட்டு வழக்கில் சிறை சென்றவர்.

தனது நண்பரோடு சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட பாலாஜி திருவொற்றியூர் தொடங்கி தேனாம்பேட்டை வரை மூன்று மணி நேரத்திற்குள் 18 செல்போன்களை திருடியுள்ளார். அவரிடமிருந்து திருட்டு செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார் பைக் ஓட்டிவந்த நபரை பிடிக்கவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments