Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்டா பகுதியில் என்னென்ன தொழிற்சாலைகளுக்கு தடை? அரசிதழில் அறிவிப்பு

Advertiesment
டெல்டா பகுதியில் என்னென்ன தொழிற்சாலைகளுக்கு தடை? அரசிதழில் அறிவிப்பு
, செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (08:04 IST)
டெல்டா பகுதியில் என்னென்ன தொழிற்சாலைகளுக்கு தடை?
காவிரி டெல்டா பகுதியான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தெந்த தொழில்களுக்கு தடை என்பது குறித்த தமிழக அரசு உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதி விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வேளாண்மை மேம்பாட்டையும் பாதிக்கும் வகையில், சில தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..
 
இதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரபாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமாராட்சி ஆகிய கோட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி ஆகிய கோட்டங்களிளும் கீழே கூறப்பட்டுள்ள தொழில்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
 
துத்தநாகம் உருக்கு ஆலை, இரும்பு தாது கையாளும் ஆலை, ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலை, ஸ்பாஞ்ச் இரும்பு ஆலை, தாமிர உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, எலும்புத்தூள், விலங்குகள் கொம்புகள், குளம்புகள் சம்பந்தப்பட்ட தொழில்கள், தோல் தொழிற்சாலைகள், மீத்தேன், ஷேல் கியாஸ் மற்றும் அதுபோன்ற ஹைட்ரோ கார்பன் உள்பட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வு, துளையிடுதல், பிரித்தெடுத்தல் தொழில், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகிய தொழில்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 
 
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை: காரணமான காதலர் வெட்டிக்கொலை