Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 லட்சத்தை தாண்டிய கைது எண்ணிக்கை: விழிப்புணர்வு இல்லாத மக்கள்!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (11:23 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றியதால் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 3,12,282 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 2,94,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அதை பின்பற்றாமல் சுற்றியதாக லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரும் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments