நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தற்போது இராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனபோதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் பரோடா பகுதியில் மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பத்து தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருந்த 28 சக ராணுவ வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் ஒரே ஏடிஎம் இயந்திரந்தில் பணம் எடுக்க சென்றது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ஏடிஎம் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மில் கடந்த சில நாட்களில் பணம் எடுக்க வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.