Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்பரப்பி கலவரம் : பாமக வழக்கறிஞர் திமுக மீது குற்றச்சாட்டு

பொன்பரப்பி கலவரம் : பாமக வழக்கறிஞர்  திமுக மீது குற்றச்சாட்டு
, புதன், 24 ஏப்ரல் 2019 (13:55 IST)
சமீபத்தில் பொன்பரப்பி என்ற பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தரக்குறைவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ பரவியது. இதனால் இரு  சமூகத்தினர் மோதிக்கொண்டனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.
இந்நிலையில் பாமக வழக்கறிஞர் பாலு பொன்பரப்பி சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
’’சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில்  வாக்குப்பதிவு அன்று அங்குள்ள விநாயகர் கோயில் அருகே விடுதலைச்சிறுத்தைகள் ஓட்டுப்போட வருபவர்களுக்கு பானையைக் காட்டி மோர் தருவதாகக் கூறி பிரசாரம் செய்துள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளியான வீர பாண்டியனை  அக்கட்சியினர் தாக்கினர்.
 
இதனைப் பார்த்த பாமகவினர் விசிகவினரைத் தட்டிக்கேட்டதற்கு கல்லால் தாக்கியுள்ளனர். அவர்களை விரட்டவே பாமக தொண்டர்கள் பொன்பரப்பி ஊருக்குள் சென்று துரத்தியுள்ளனர். இதை வீடியோவாக எடுத்து விசிக கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
 
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் திருமாவளவன் போராட்டம் என்று அறிவிக்கிறார்.இதன் பின்பின்னணியில் ஸ்டாலின் இருந்து ஆளும் கட்சிக்குக் கலங்கம் விளைவிக்க எண்ணுகிறார்.  விசிகவை வைத்து ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் .
 
மேலும், அரசியல் நோக்கத்திற்க்காகத்தான் தமிழகம் முழுவதும் நாளை போரட்டம் நடத்ததவுள்ள  திருமாவளவனுடன் ஸ்டாலினும் போராட்டம் நடத்த இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
webdunia
இதற்கு ஸ்டாலின் பதிலடி கொடுப்பாரா என்று திமுக கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்; 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தன பேருடா யூஸ் பண்ணுவீங்க... உங்க பாஸ்வேர்டும் இதுவா..?