Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்புமணி மகளுக்கு இரட்டை குழந்தை: தாத்தாவாக மாறிய இளைஞரணி தலைவர்

அன்புமணி மகளுக்கு இரட்டை குழந்தை: தாத்தாவாக மாறிய இளைஞரணி தலைவர்
, வியாழன், 4 அக்டோபர் 2018 (08:32 IST)
ஒரு கட்சியின் இளைஞரணிக்கு தலைவராக இருக்க வேண்டியவர்கள் இளைஞராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 40 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் பலர் இளைஞரணி தலைவராக இருந்துள்ளனர் என்பது தமிழக அரசியலில் சர்வ சாதாரணம்

அந்த வகையில் 49 வயதான அன்புமணி ராமதாஸ் அவர்கள் பாமகவின் இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இளைஞரணி தலைவரான அன்புமணி, இன்று இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவாகி உள்ளார்.

webdunia
ஆம், அன்புமணியின் மகள் சம்யுக்தா - பிரதீவன் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தை பிறந்தது.  சென்னை தனியார் மருத்துவமனையில் அன்புமணியின் மகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதாகவும், தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான அன்புமணிக்கு அவரது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை