தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரித்து பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முக்கிய தலைவர்கள், முதல்வர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதில் பேசிய அவர் “அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தமிழகத்திலிருந்து மட்டும் 120 கோடி ரூபாய் வந்தது. திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு பெண்கள் குறித்த அக்கறை கிடையாது. பாஜக பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. பிரதமர் மோடிக்கு தமிழகம் மீது தனி பிரியம் உண்டு. பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகம் மீதுதான்” என தெரிவித்துள்ளார்.