Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. ஐந்து மாநில தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் உயரும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த செய்திகளின் படி சரியாக ஐந்து மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடன் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம் 
 
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்து, பெட்ரோல் லிட்டர் விலை ரூ.92.55 காசுகள் என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் விலை ரூ.85.90 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது. 
 
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தற்போது உயர்ந்து கொண்டே இருப்பதால் இனி தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments