தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இருந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை குறையாமலும் உயராமலும் அதே விலையில் இருந்து வந்தது
இந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை ஒரு தகவலைப் பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து 92.43 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலை 13 காசுகள் குறைந்து 85.75 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் குறைந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சிப் உள்ளாக்கியது
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஐந்து மாநில தேர்தல் மட்டுமே என்றும் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.