தடுப்பூசியின் விலை உயர்வால் மக்கள் அதை போட்டுக்கொள்ளாமல் இருக்க கூடாது என்ற காரணத்தால் நாட்டின் சில மாநிலங்கள் தடுப்பூசியை இலவசம் என அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னதாக அவசரகால தடுப்பூசிகளாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டன. முதற்கட்டமாக 60 வயதிற்கு மேலானவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேலானவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது மே 1 முதல் மூன்றாவது கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் கோவிஷீல்டு நிறுவனம் தடுப்பூசியின் விலையையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசியின் விலை உயர்வால் மக்கள் அதை போட்டுக்கொள்ளாமல் இருக்க கூடாது என்ற காரணத்தால் நாட்டின் சில மாநிலங்கள் தடுப்பூசியை இலவசம் என அறிவித்துள்ளது. ஆம், கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.