Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்களிக்க தவறியது ஏன்? பார்த்திபன் விளக்கம்!

வாக்களிக்க தவறியது ஏன்? பார்த்திபன் விளக்கம்!
, புதன், 7 ஏப்ரல் 2021 (12:30 IST)
நடிகர் பார்த்திபன் வாக்களிக்க தவறவிட்டதற்கான காரணத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் முன்னணி சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். ஆனால் நடிகர் பார்த்திபன் வாக்களிக்க தவறவிட்டதற்கான காரணத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது. வணக்கமும் நன்றியும்... ஜனநாயகக் கடமையை சீராகச் செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும், இயலாமையும்.... இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் தடித்து வீங்கிவிட்டது. டாக்டருக்குக் கூட போட்டோ எடுத்தனுப்பியே மருத்துவம் செய்துக் கொண்டேன். மாலை வரை சற்றும் குறையவில்லை. 
 
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில் என்று பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?