Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிதி ;ரூ.543 கொடுத்த சிறுமி.. முதல்வர் பழனிசாமி பாராட்டி டுவீட்

Advertiesment
கொரோனா நிதி ;ரூ.543 கொடுத்த சிறுமி.. முதல்வர் பழனிசாமி  பாராட்டி டுவீட்
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (15:58 IST)
தமிழகத்தில் கொரோன தொற்றைத் தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஏழை எளிய மக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர். இவர்களுக்கு அரசும், பல்வேறு சேவை நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், திருபுவனத்தைச் சேர்ந்த, ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி,ஹேம ஜெயஸ்ரீ, கொரொனோ நிவாரணா தொகையாக தான் சேமித்து வைத்திருந்த ரூ.543 –ஐ தனது அப்பாவின் வங்கிக் கணக்கு மூலமாக முதல்வர் ஐயாவுக்கு அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பதிக்குக்கு டேக் செய்துள்ளார்.

அதைப்பார்த்த முதல்வர்,

சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா நிவாரணத்திற்காக, தான் சேமித்து வைத்திருந்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை - திருபுவனத்தை சேர்ந்த குழந்தை ஹேமஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! என பதிவிட்டுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கில் மோட்டாரை திறக்க வந்த ரோஜா: சமூக ஆர்வலர்கள் கண்டனம்