Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில்..! பெண்களுக்கு அனுமதியில்லாத திருவிழா..!!

Senthil Velan
புதன், 17 ஜனவரி 2024 (10:13 IST)
உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் ஜக்கம்மாள் கோவிலில் தை மாத சிறப்பு வழிபாடு  வெகுவிமர்சையாக நடைபெற்றது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில் தை இரண்டாம் தேதியை முன்னிட்டு எருமார்பட்டி, ரெங்கசாமிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஜக்கம்மாள் வாழ்வதாக நம்பப்படும் பழமையான மரத்திற்கு பழம் தட்டுடன் வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
 
இந்த திருவிழாவின் போது அந்த ஊர் மற்றும் அதன் பக்கத்து கிராமங்களில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை மேளதாளத்துடன் அழைத்து வந்து வழிபாடு செய்வார்கள். இந்த வழிபாட்டில் பெண்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். 

ALSO READ: பாலமேடு ஜல்லிக்கட்டில் 46 பேர் காயம்.! 4வது முறையாக முதல் பரிசு வென்ற வீரர்..!!
 
ஆண்கள் மட்டும் பழத்துடன் வந்து கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து ஜக்கம்மாளுக்கு பூஜை முடியும் வரை காத்திருந்தனர். பின்னர் ஜக்கம்மாள் குடி கொண்டிருக்கும் வாகை மரத்திற்கு பக்தர்கள் கொண்டு வந்த புத்தாடைகள் மற்றும் மாலைகளை அணிவித்து ஜக்கம்மாளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. 
 
பின்னர் பூசாரிகள் பக்தர்கள் கொண்டு வந்த தேங்காய்களை உடைத்து ஜக்கம்மாளுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments