ஸ்ரீகாளஹஸ்தி யில் ஏழு கங்கை அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் பக்தர்கள் அதை பார்க்க குவிந்தனர்
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தியில் ஏழு கங்கை அம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏழு கங்கை அம்மன் கோவிலில் கங்கை அம்மன்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாகவும் பூஜை முடிந்ததும் ஏழு கங்கை அம்மன்கள் திரை அகற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து கங்கை அம்மன்கள் திருக்கல்யாணம் மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதிகாலை முதல் இந்த ஊர்வலம் தொடங்கியதாகவும் சுமார் 3 மணி நேரம் ஊர்வலம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த திருவிழாவை காண்பதற்காக ஸ்ரீ காளகஸ்தி பொதுமக்கள் மற்றும் அதை சுற்றி உள்ளவர்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து காவல்துறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.