Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மன் கோவில் திருவிழா: சிலுகவயல் கிராம மக்கள் சார்பாக மேற்கொண்ட பீம வேஷம் மெய் சிலிர்க்கவைத்தது- அண்ணாமலை

annamalai
, திங்கள், 31 ஜூலை 2023 (21:33 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை ராமேஸ்வரத்தில்  நடந்து வருகிறது. இதில், ‘’ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் சிலுகவயல் கிராம மக்கள் சார்பாக மேற்கொண்ட பீம வேஷம் மெய் சிலிர்க்கவைத்தது’’ என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின்  ‘’என் மண் என் மக்கள் ‘’ பாத யாத்திரை ராமேஸ்வரத்தில்  நடந்து வருகிறது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த கலந்துகொண்டு அண்ணாமலையில் யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் நிலையில், அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக  தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திருவாடானை அழியாதான்மொழி கிராமசபைக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு  பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பொதுமக்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதேபோல், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ் மங்கலத்தில் 22 கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் சிலுகவயல் கிராம மக்கள் சார்பாக மேற்கொண்ட பீம வேஷம் மெய் சிலிர்க்கவைத்தது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:

‘’இன்று திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ் மங்கலத்தில் #என்மக்கள் என் பயணம் நடைபயணத்தின் போது 22 கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் சிலுகவயல் கிராம மக்கள் சார்பாக மேற்கொண்ட பீம வேஷம் மெய் சிலிர்க்கவைத்தது.’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்பாரில் கிடந்த பேப்பர்...பெருச்சாளி எதுவும் இருக்கா? ஓட்டல் ஊழியர்களை வெளுத்து வாங்கிய அதிகாரி