தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (14:38 IST)
தி.மு.க.வை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது

 கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது . ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை. அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை."

"தி.மு.க.வை மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் எடுக்க முடியும்."

"தி.மு.க. கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் கருத்தகளை சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலைநோக்கு பார்வை வேண்டும்.

"தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கிற ஒரு துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்," எனத் திருமாவளவன் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments