இந்தியாவில் உச்சநீதிமன்றத்தால் தான் உள்நாட்டு போர் ஏற்படுகிறது: பாஜக எம்பி

Siva
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (14:30 IST)
இந்தியாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தான் உள்நாட்டு போர் நடக்கிறது என்று பாஜக எம்பி சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நிலையில், அவரது கருத்தை பாஜக தலைமை நிராகரித்துள்ளது.

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி  நிஷிகாந்த் துபே என்பவர், "நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரத்து செய்வதன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது," என்று குற்றம் சாட்டினார்.

"உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றினால், நாடாளுமன்றத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும்," என்றும், உச்சநீதிமன்ற நீதிபதியையே நியமனம் செய்யும் குடியரசுத் தலைவருக்கு கூட உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது," என்றும், "இது உள்நாட்டு போர் ஏற்பட காரணமாக அமையும்," என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கூறியவை அவரது சொந்த கருத்து" என்றும், "அந்த கருத்துக்களை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நாட்டா தெரிவித்துள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments