Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? அண்ணா பல்கலை ஆலோசனை

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (07:26 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கலைக்கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. 
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு,  இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை கூறியுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் ஜூலை இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது
 
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு  சேர வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி ஜூலை இறுதியில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள்  தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments