Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது ஏன்? திடுக்கிடும் தகவல்

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (07:17 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகம் பரவி வந்த நிலையில் தற்போது மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் தான் என்று கூறப்படுகிறது
 
சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும், இதனால் தான் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இதனால் தான் தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இபாஸ் தேவை என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வது கடினம் என்பதும், தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இபாஸ் எடுத்து கொண்டு சொந்த ஊர் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மதுரை, கடலூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ராமநாதபுரம், தஞ்சை, கோவை, தேனி, தென்காசி, திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments