Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி

Advertiesment
கடையை அடைத்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? ஒரு வியாபாரியின் கேள்வி
, செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:01 IST)
3'ம் தேதி கடையடைப்பு... விக்கிரமராஜா.
5'ம் தேதி, கடையடைப்பு... ஸ்டாலின்
11"ம் தேதி கடையடைப்பு...வெள்ளையன்...

அடுத்தது மே5 வணிகர் தினம் என்று நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு. இன்னும் பல இலட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு. கடை அடைத்தால் காவிரி ஆணையம் கிடைத்து விடுமா?

கடையே இல்லாத தலைவர்களே எங்களை கடை அடைக்க சொல்கிறீர்களே இது நீயாயமா? நாங்கள் வாங்கிய கந்து வட்டி பணத்திற்கு நீங்கள் யாராவது பணத்தை கட்ட தயாரா? நாங்கள் கடையை அடைத்து போராட தயார். அதே நேரத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் சார்பில் இயங்கி வரும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஒரு நாள் மட்டும் நிறுத்துவீர்களா? கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?

இவ்வாறு ஒரு வியாபாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சிந்திக்க வேண்டிய பதிவு
webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி விவகாரம்; முதலமைச்சர், துணை முதலமைச்சர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பு