Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (10:11 IST)
தமிழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு அவசியம் என்று கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்காமல் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு முதல் பலியாக கடந்த ஆண்டு அரியலூர் அனிதா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் இந்த ஆண்டும் நீட் தேர்வு தோல்வியால் மாணவர்களின் தற்கொலை நீடித்து வந்த நிலையில் இன்று சென்னை, சேலையூரில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால், தனியார் கல்லூரி மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் மேலும் ஒரு உயிரின் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தற்போதுதான் அடங்கியுள்ள நிலையில் இந்த தற்கொலையால் போராட்டம் செய்ய அரசியல் கட்சிகள் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments