Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வாரியத்தில் வேலை.... அடுத்த மோசடியில் சிக்குகும் ராஜேந்திர பாலாஜி?

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (10:48 IST)
தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார். 

 
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
 
மேலும் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி, மதுரை ஆவினில் 2019 - 2020 ஆம் ஆண்டும் ரூ.30 கோடிக்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி மோசடி ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த 2 பேரிடம் மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி என புகாரில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments