Publish Date: Wed, 29 Dec 2021 (09:25 IST)
Updated Date: Wed, 29 Dec 2021 (09:27 IST)
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.
இந்நிலையில் மதுரை ஆவினிலிருந்து திருப்பதிக்கு அனுப்பபட்ட நெய்யில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மோசடியில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்புள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.