Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐடி ரெய்டில் ஒன்றும் சிக்கவில்லை….மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி

Advertiesment
ஐடி ரெய்டில் ஒன்றும் சிக்கவில்லை….மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி
, வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (21:22 IST)
திமுக தலைவர்  ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதற்கு ஸ்டாலின், பனங்காட்டுநரி சலசலப்புகளுக்கு அஞ்சாது அதுபோல் நான் கலைஞரின் மகன் எமர்ஜென்சியை பார்த்தவன் இந்த சலசலப்புகளுகு அஞ்ச மாட்டேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெரும் அரசியல் பரப்பரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும், செந்தில் பாலாஜியின் வீட்டிலும்  நடைபெற்ற ஐடி சோதனை முடிவடைந்துள்ளது. ஆனால் ஏதும் கிடைக்கவில்லைஎனத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் 11 மணிநேரமாக நடைபெற்று வந்த சோதனையில் ஏதும் கிடைக்கவில்லை;
எங்கள் மீது சேறு வாரி வீச வேண்டுமென்று தான் ஐடி சோதனை நடத்தியுள்ளனர். மோடிக்குதான் நான் நன்றி சொல்லனும்.இங்கு இருந்த பணமே 1லட்சத்து 36 ஆயிரம் தான் குடும்பச்செலவுக்காக வைத்திருந்தார்கள் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐடி ரெய்டு பாஜகவின் கோழைத்தனம்: தயாநிதி மாறன் ஆவேசம்