Publish Date: Fri, 02 Apr 2021 (20:08 IST)
Updated Date: Fri, 02 Apr 2021 (20:10 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நாளை மறுநாள் உடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து திமுக அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரத்தை தற்போது செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இன்று காலை முதல் திடீரென வருமான வரித்துறையினர் திமுகவின் முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் இல்லத்தில் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் கடந்த 12 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வருமான வரித்துறையினர்களின் இந்த சோதனை ஒருதலை பட்சமானது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திமுக எம்பி தயாநிதி மாறன் அவர்கள் இந்த வருமான வரி சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
திமுக தலைவரின் மகள் மற்றும் வேட்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பாஜகவின் கோழைத்தனத்தை காட்டுகிறது என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்