Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊர் உறங்கிய பின் நள்ளிரவில் பதில்.. திமுக ஆட்சியில் விடியலே இல்லை: அண்ணாமலை

Advertiesment
ஊர் உறங்கிய பின் நள்ளிரவில் பதில்.. திமுக ஆட்சியில் விடியலே இல்லை: அண்ணாமலை

Mahendran

, வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (11:53 IST)
பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. பெரியகருப்பன். திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். 
 
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 - 2022 முதல் 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே?
 
நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும். 
 
நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா?
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்க.. முடியல! - போராட்டத்தில் குதித்த அமெரிக்க மக்கள்!