Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை?

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (20:01 IST)
சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இல்லை?
வங்கக் கடலில் தோன்றிய நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி தற்போது தமிழகத்தை நோக்கி மிக விரைவாக வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று இரவுக்கு மேல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
அனேகமாக நாளை அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் கரையைக் கடக்கலாம் என்று தேசிய பேரிடர் தலைவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இரவு முழுவதும் பாதுகாப்பு படையினர் மீட்பு படையினர் விழிப்புடன் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று இரவு நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து கொண்டிருப்பதாகவும் சென்னையில் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது
 
சற்றுமுன் வந்த தகவலின்படி நிவர் புயல் காரணமாக தென் சென்னையில் வேளச்சேரி, தில்லை நகர், எம்.ஜி.ஆர்.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில், வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, கோருக்குபேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் நிவர் புயல் காரணமாக வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரில் பாம்பு போன்ற விஷஜந்துக்கள் ஏதேனும் வந்தால் சென்னை கிண்டி வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும், கிண்டி வனச்சரக அதிகாரி கிளமென்ட் எடிசன் செல்போன் எண் 9566184292 என்றும், வனச்சரக எண் 044 22200335 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments