Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவர் புயல் எதிரொலி: மூடப்படுகிறது சென்னை விமான நிலையம்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (18:42 IST)
வங்கக்கடலில் அதிதீவிரமாக உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவர் புயலையடுத்து அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பேருந்துகள் ரயில்கள் மின்சார ரயில்கள் ஆகியவை நிறுத்தப்பட்டன. ஒருசில விமானங்களும் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக திருச்சியில் இருந்து கிளம்பும் 5 விமானங்கள் நிறுத்தப்பட்டதாக இன்று காலை செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments