தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
	
 
									
										
								
																	
	
	இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7,74,710 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா மொத்த பாதிப்பு 2,13,417 ஆக உள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 1,873 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,51,535 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலி எண்ணிக்கை 16 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 11,655 ஆக உள்ளது. இன்று ஒருநாளில் 68,082 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,17,41,603 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.