Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:42 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால்  அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இப்புயல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே இன்று அல்லது நாளை கரையை கடக்கும் எனவும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும் என்பதால் அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் , கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தியதுடன் தமிழகத்தில் உள்ள 11 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுத்தியுள்ளது. ஏற்கனவே பல துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments