Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை ரத்து....முதல்வர் அறிவிப்பு

7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை ரத்து....முதல்வர் அறிவிப்பு
, திங்கள், 23 நவம்பர் 2020 (20:18 IST)
நாளை மதியம் 1 மணிமுதல் 7 மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நிவர் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், காற்றழுத்த தாழ்வு மண்டலம்வரும் 24 ஆம் தேதி அன்று புயலாக மாறி அடுத்த நாள் அதிதீவிரப் புயலாக உருவெடுத்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிவர் புயல் காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுள்ளது.
webdunia

இந்நிலையில் நிவர் முயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதாவது:

பாதுகாப்புஏற்படுத்தக்கூடிய  மற்றும் பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாங்களுக்கு உடனடியாக அழைத்துச் செல வேண்டும்.

நிவாரண் முகாம்களில் குடிநீர், கழிவுநீட் மின்சாரம் இல்லையெனில் ஜெனரேட்டர் மூலம் மின்விசிறி வசதிகளும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்பு, சிலிண்டர்கள் சமையல்காரர்கள் , பாய், போர்வைகள் அனைத்து வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடலோரத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் மீன்வலைகள் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பாதுகாத்தல் வேண்டும்.

 தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புயல்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கூடுதலாக 1000 பணியாளர்களையும் கூடுதல் மின்கம்பங்கள், மின்மற்ரிகல் மற்றும் மின் கடத்திகள் போன்றவற்றை பிற மாவட்டங்களில் இருந்து பெற்றுத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிகை நடவடிக்கையாக  புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாவூர், கடலூர்,விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையே மேலும் நாளை மதியம் 1 மணிமுதல் 7 மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களின் சொந்தக் காரணங்களுக்கான டூவிலர் மற்றும் வாகனங்களில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

நிவர் புயல் தொடர்பாக அந்தந்த மாவட்ட போக்குவரத்துக் கழகம் முடிவெடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரொனா உறுதி! 17 பேர் பலி