Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடகைக்கு வீடு.. அதற்காக ஒரு போலி கணவர் : நிலானி ஓப்பன் டாக்

Advertiesment
Actres nilani
, வியாழன், 11 அக்டோபர் 2018 (14:07 IST)
காந்தி லலித்குமாருடன் பழகியதற்கான காரணத்தை நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.

 
காந்தி என்கிற லலித்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, சீரியல் நடிகை நிலானியின் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளது. லலித்குமார் ஒரு பொம்பள பொறுக்கி. அவன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். என்னையும் ஏமாற்றினான். திருமணம் செய்து கொள் என எனை மிரட்டி எனக்கு தொல்லை கொடுத்து வந்தான் என நிலானி கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். 
 
மேலும், சில நாட்களுக்கு முன்பு திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆஜ நிலானி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
காந்தி லலித்குமாருடன் பழகியது குறித்து விளக்கம் அளித்துள்ள நிலானி, நடிகை என்றாலே வேறு மாதிரி பார்க்கிறார்கள். வாடகைக்கு வீடு தர மறுக்கிறார்கள். கணவன் இருந்தால்தான் வீடு தருவார்கள். எனவேதான், காந்தி லலித்குமாரை என் கணவர் போல் காட்டிக்கொண்டேன். அவரையே திருமணம் செய்வது என முடிவெடுத்தேன். ஆனால், அவரை பற்றிய உண்மை தெரியவே விலக முடிவெடுத்தேன். மற்றபடி, அவரிடமிருந்து பணத்தை கறந்து அவரை ஏமாற்றவில்லை” என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா கத விடக்கூடாது, பக்கா ஆதாரம் வேண்டும்: (# ME TOO) மீடூ குறித்து பெண் பிரபலம் பேச்சு