Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொண்ணு ஒன்னு தான் ஆனா புருஷன் ரெண்டு: வாலிபர்களின் வாழ்க்கையில் விளையாடிய இளம்பெண்

Advertiesment
பொண்ணு ஒன்னு தான் ஆனா புருஷன் ரெண்டு: வாலிபர்களின் வாழ்க்கையில் விளையாடிய இளம்பெண்
, புதன், 10 அக்டோபர் 2018 (12:16 IST)
வேலூர் மாவட்டத்தில் திருமணமாக சில மாதங்களிலேயே இளம்பெண் ஒருவர் தனது பழைய காதலனுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் சமிதா. இவருக்கும் சக்திவேல் என்ற வாலிபருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது போட்டோ எடுப்பது சம்மந்தமாக இரு வீட்டாரிடமும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
 
பின் நாளடைவில் அது சரியாகிவிட்டது. இதனை காரணம் காட்டி, சமிதா சக்திவேல் வீட்டிலிருந்து வெளியேறி தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். சக்திவேல் மனைவி சமிதாவை சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சமிதா சக்திவேலிடம் மூஞ்சு கொடுத்து பேசவில்லை. இதனால் விரக்தியுடன் சக்திவேல் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் சக்திவேல் சாமி கும்பிட திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கே தனது மனைவி கழுத்தில் புதிய தாலியுடன் வேறு ஒரு வாலிபருடன் கொஞ்சிப் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நேராக சென்று சமிதாவிடன் சண்டையிட்டார்.
 
பின்பு தான் சக்திவேலுக்கு உண்மை தெரிய வந்தது. சமிதா 11ஆம் வகுப்பு படித்த போதே கார்த்திக் என்ற வாலிபருடன் பழகி கர்ப்பமாகி இருக்கிறார். இதனை மறைத்து அவரின் பெற்றோர் சமிதாவை சக்திவேலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
 
திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கை மறக்க முடியாத சமிதா, திருமணத்தின் போது போட்டோ எடுப்பது தொடர்பான பிரச்சனையை சாக்காக வைத்து, கணவன் சக்திவேலின் மீது பழிபோட்டுவிட்டு பள்ளிக்காதலன் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
 
இதுகுறித்து சக்திவேல் சமிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீஸார் சமிதாவையும் அவரது குடும்பத்தாரையும் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் தகாத உறவு கொண்ட சப்- இன்ஸ்பெக்டர்...