Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ரக வெட்டுக்கிளி: தமிழகத்திற்கு படையெடுப்பா?

Advertiesment
புதிய ரக வெட்டுக்கிளி: தமிழகத்திற்கு படையெடுப்பா?
, வெள்ளி, 29 மே 2020 (12:44 IST)
தமிழகத்தில் புதிய ரக வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். 
 
வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று.
 
2019 ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது. இதனால், அந்த மாநிலத்தில் 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
 
ஆனால், வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
 
ஆனால், உதகை அடுத்துள்ள காந்தள் பகுதியில் புதிய ரக வெட்டுக்கிளியை பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தை சேர்ந்ததாக இருக்குமோ என அச்சமடைந்தனர். 
 
எனவே அந்த வெட்டுக்கிளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இமெயில் மூலமா 6 லட்சம் மனு அனுப்பியிருக்கோம்! – மு.க.ஸ்டாலின் ட்வீட்!