சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கம்.
இந்தியா – சீனா இடையே லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எல்லைப்பகுதியில் இந்தியா சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்த்து வருகிறது. அதேசமயம் சீனா இராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் எல்லையில் குவித்து வருகிறது.
இந்த மாதத்தில் மட்டும் இருமுறை சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு சண்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவும் எல்லைப்பகுதியில் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் சீனா எல்லை விவகாரம் குறித்து பேசினேன். இந்திய பிரதமர் நல்ல மனநிலையில் இல்லை. நான் இந்திய பிரதமரை மிகவும் விரும்புகிறேன். அவர் நல்ல மனிதர். அதிகமான மக்களை கொண்ட இரண்டு நாடுகளும் தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீப காலங்களில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் இடம் பெறவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ட்ரம்ப் கூறியது பொய் என தெரிவருகிறது.