Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (12:08 IST)
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது, இதனால் பல மாவட்டங்களில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரே சமயத்தில் அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை பொழிவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments