தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா! – ஒமிக்ரானா என பரிசோதனை!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:55 IST)
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அது ஒமிக்ரான் வைரஸா என சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பரவியுள்ள கொரோனா ஒமிக்ரான் வகையா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments