Publish Date: Mon, 29 Nov 2021 (10:28 IST)
Updated Date: Mon, 29 Nov 2021 (10:29 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 25 மாவட்டத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்திற்குள் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது