சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

Siva
ஞாயிறு, 16 நவம்பர் 2025 (16:10 IST)
சென்னையில் 96 என்ற புதிய வழித்தடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பேருந்து இன்று துவக்கி வைக்கப்பட்டது. 
 
இந்த பேருந்து தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் முதல் அடையாறு பேருந்து நிலையம் வரை செல்லும். 96 என்ற புதிய வழித்தடத்தை சென்னை மாநகர போக்குவரத்து அறிமுகம் செய்ததை அடுத்து, அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பேருந்து தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்தில் கிளம்பி, கேம்ப்ரோடு, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி வழியாக அடையாறு செல்லும். ஏழு புதிய பேருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
 
இந்த பேருந்து இயக்க வேண்டும் என்று பல நாட்களாக இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போதுதான் அந்த கோரிக்கை நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments