நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்தி அம்மாள் கோவிலில் இருந்த 56 வயது காந்திமதி என்ற யானை உயிரிழந்ததை அடுத்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு சில நாட்களாக நடமாடாமல் இருந்ததாகவும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தும் யானை உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென கீழே விழுந்தது அதனால் மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை என்றும் யானை பாகன் எவ்வளவோ முயற்சி செய்தும் அது கை கொடுக்காததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் விரைந்து சென்று யானையை சோதனை செய்த நிலையில் இரண்டு பெரிய கிரேன்கள் கொண்டு வரப்பட்டு அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் நின்று இருந்த யானை மீண்டும் கீழே படுத்தது. இதனை அடுத்து சில மணி நேரங்களில் காந்திமதி யானை உயிரிழந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.