Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை.. கடைசி தேதி என்ன?

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:21 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது 
 
2024-25 கல்வி ஆண்டு நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி நள்ளிரவு 11:55 என்ன விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப தேதி மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கபடுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இரவு 11.50 மணி நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பதிவு மாணவர்கள் neet.nta.nic.in  என்ற இணையதளம் வழியாக மார்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் https://nta.ac.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments