கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மேல்சாந்தி என்னும் தலைமை பூசாரி பதவிக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
கேரளாவில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மேல்சாந்தி என்னும் தலைமை பூசாரி பதவிக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம் போர்டு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது
இந்த அறிக்கைக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதுகுறித்து பொதுநல வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம் மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற திருவாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்ட அறிக்கை சரிதான் என்று தெரிவித்தது
கோவிலுக்குள் நுழையும் உரிமை என்பது பூஜை செய்வதற்கான உரிமை அல்ல என்றும் கோவில் விவகாரங்களில் பாரம்பரிய நடைமுறைகளை தேவசம்போர்டு கடைபிடிக்க வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது