சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் மே மாதம் 26-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது.
சுமார் 1,056 இடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் நிறைவடைய இருந்தது. கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இந்த நிலையில், சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் upsconline.nic.in இணைய தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.