Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் படத்திறப்பு விழாவை சசிகலா தவிர்ப்பது ஏன்?

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (19:53 IST)
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20ஆம் தேதி மரணம் அடைந்த நிலையில் அவருடைய படத்திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பழ.நெடுமாறன், நல்லகண்ணு, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், சீமான், வைரமுத்து, பாரதிராஜா, கே.ஆர்.ராமசாமி, தி.மு.க-வைச் சேர்ந்த எல்.கணேசன் மற்றும் டி.டி.வி.தினகரன், திவாகரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் சசிகலாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் அவரை வற்புறுத்தி வருகின்றார்களாம். ஆனால் சசிகலா பிடிவாதமாக கணவரின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டாராம்.

சசிகலா இந்த படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கு அவரது ஆதரவாளர்கள் ஒரு முக்கிய காரணத்தை கூறுகின்றனர். 15 நாட்கள் `பரோலில் வந்துள்ள சசிகலா அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது என்றும், பொது மேடையில் அரசியல் குறித்து எதுவும் பேசக் கூடாது என்றும் மற்றும் மீடியாவிற்கு பேட்டியளிக்கக் கூடாது என்றும் பெங்களூர் சிறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதில் ஏதாவது ஒரு கட்டுப்பாட்டை சசிகலா மீறினாலும் இனிமேல் பரோலில் வரமுடியாது என்பது மட்டுமல்ல, தற்போதுள்ள பரோலும் கேன்சலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விழாவில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments