Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா புஷ்பாவோடு ஏன் திருமணம்?- வழக்கறிஞர் ராமசாமி விளக்கம்

Advertiesment
சசிகலா புஷ்பாவோடு ஏன் திருமணம்?- வழக்கறிஞர் ராமசாமி விளக்கம்
, புதன், 28 மார்ச் 2018 (10:55 IST)
தனது 2வது மனைவி சத்யப்ரியா தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் வழக்கறிஞர் ராமசாமி புகார் கூறியுள்ளார்.
 
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா அவரின் வழக்கறிஞர் ராமசாமியை  2வது திருமணம் செய்து கொண்டதுதான் கடந்த சில நாட்களாக இனையத்தில் செய்தியாக இருந்தது. அந்நிலையில், ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா புஷ்பாவின் திருமணத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், டெல்லியில் திருமணம் நடந்து முடிந்தது.

 
இந்நிலையில், செய்தியாளரளிடம் விளக்கம் அளித்த ராமசாமி ‘ஒரு விபத்தில் எனது மனைவி மற்றும் மகனை பறிகொடுத்தேன். நானும், எனது மகளும் மட்டுமே தப்பினோம். எனவே, என் மகளை பார்த்துக்கொள்ள சத்யபிரியாவை திருமணம் செய்தேன். ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததை என்னிடம் மறைத்தது பின்புதான் தெரியவந்தது. மேலும், என் மகளை அவர் கொடுமைப்படுத்தினார். அதோடு, அவரின் சகோதரர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது டெல்லியில் புகாரும் அளித்துள்ளேன். தற்போது மகளின் எதிர்காலத்திற்காகவே சசிகலா புஷ்பாவை திருமணம் செய்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்துபோன தந்தையின் சடலத்தை 8.கி.மீ தூரம் ரிக்‌ஷாவில் இழுத்துச் சென்ற பிள்ளைகள்